search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகளை காப்பாற்றி உயிரை விட்ட டிரைவர்"

    கேரள மாநிலம் கோட்டயத்தில் ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டதால் 43 பயணிகளை சாதுர்த்தியமாக காப்பாற்றி டிரைவர் உயிர் விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #DriverMadhu
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் மது (வயது 48). தனியார் பஸ் டிரைவர். நேற்று இரவு கோட்டயத்தில் இருந்து மலப்புரம் மாவட்டம் புத்தன் அத்தானி என்ற இடத்திற்கு 43 பயணிகளுடன் புறப்பட்டார்.

    இந்த வழிச்சாலை 10 அடி முதல் 100 அடி வரை பள்ளம் உள்ள மலைப்பகுதிபோன்று இருக்கும். பஸ் வேகமாக கோட்டைக்கல் என்ற இடம் வந்தபோது டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. நெஞ்சை பிடித்தவாறு பஸ்சை ஓட்டினார். இருந்தாலும் பஸ் தாறுமாறாக ஓடியது. இதனால் பயணிகள் அலறி சத்தம்போட்டனர்.

    ஒரு புறம் கிடுகிடு பள்ளம், எதிர்புறம் ராட்சத மரம். பயணிகளை காப்பாற்ற வேகத்தை குறைத்த டிரைவர் உடனே ஹேண்ட் பிரேக்கை பிடித்து பஸ்சை நிறுத்தினார். ராட்சத மரத்தில் மோதாமல் பஸ் பத்திரமாக நின்றது. பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    டிரைவரை பார்த்தபோது ஸ்டேரிங்கில் நெஞ்சை பிடித்தவாறு படுத்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த பயணிகள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    உயிர்போகும் நிலையில் சாதுர்த்தியமாக பஸ்சை நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றியது தெரியவந்தது. பயணிகள் டிரைவர் மதுவின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    இது குறித்து கோட்டைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #DriverMadhu
    ×